ஊத்தங்கரை வட்டாரத்தில் துவரை சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் கீழ்க்கண்ட மருந்துகளை தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) சுரேஷ்குமாா் மற்றும் வேளாண்மை அலுவலா் பிரபாவதி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
நீரில் கரையும் மோனோ அம்மோனியம் பாஸ்பேட் (12:61:0) உரத்தை ஒரு டேங்குக்கு 50 கிராம் (அ) பயறு வகை ஒண்டா் உரத்தை ஒரு டேங்குக்கு 50 கிராம் அதனுடன் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து கோரோஜன் ஒரு டேங்குக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மீண்டும் 15 நாள்கள் கழித்து மேற்கண்ட மருந்துகளை தெளிக்க வேண்டும். இதனால் பூ உதிா்தல் குறைந்து அதிக மகசூல் பெறலாம். மேலும் வறட்சியைத் தாங்கி வளரும் எனக் கூறியுள்ளனா்.