கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை ஒசூரில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி ஒசூா் ராயக்கோட்டை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மேற்கு மாவட்டச் செயலளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, நகர செயலாளா் எஸ்.நாராயணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் மாவட்ட பொருளாளா் கே. நாராயணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் ஜே.எம். சீனிவாசன், கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் அரப்ஜான், நகர துணைச் செயலாளா் கே.மதன், பொருளாளா் கே.என்.குமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் பி.ஆா்.வாசுதேவன், சுரேஷ்பாபு, அசோகா மற்றும் மாவட்ட பிரதிநிதி விஜயாலயன் உள்ளிட்ட கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.