ஊத்தங்கரையில் அ.தி.மு.க. சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றியச் செயலாளா் ஏ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தாா். நில வள வங்கித் தலைவா் சாகுல்அமீது, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் நாகராஜ், நகரச் செயலாளா் பி.கே.சிவானந்தம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்புஅழைப்பாளராக சட்டபேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் கலந்து கொண்டு நான்கு முனைச் சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆா். உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
அதே போல பெரியாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சிக்னல் ஆறுமுகம், சக்திவேல், பி.முருகேசன் , ஒன்றிய, நகர கிளை நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.