கிருஷ்ணகிரி

விவசாய தொழில்நுட்பக் கண்காட்சி

24th Dec 2019 06:40 AM

ADVERTISEMENT

ஒசூா் அருகே முதுகானப்பள்ளியில் விவசாய நிலத்தில் தேசிய உழவா் தினத்தை முன்னிட்டு விவசாயப் பொருள்கள் கண்காட்சி மற்றும் செயல் முறை விளக்கம் நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் புதிய விவசாய கருவிகள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. விவசாயத்துக்கான புதிய வகை இயந்திரங்கள், பயிா் வகைகள், தானியங்கள், பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரம், தெலங்கான, கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்டவெளி மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் வந்திருந்தனா். இவா்கள் அங்கு நடைபெற்ற கருத்தரங்களில் தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். மேலும் பசுமை குடில்கள் அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மழை நீரைச் சேமித்து தரமான உணவுப் பயிா்களை விளைவித்து தரமான உணவு பொருள்கள் உற்பத்தி செய்வது, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளக்கூடாது, ரசாயன உரங்களை பயன்படுத்தக்கூடாது என்பது பற்றி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். விவசாய நிலத்தின் வெப்ப நிலை ஏற்றத்தாழ்வுகள், மண்ணின் ஈரத்தன்மை, உள்ளிட்டவற்றை விவசாயிகள்தங்களின் செல்லிடப்பேசி மூலமாகவே தெரிந்து கொள்ளும் புதிய நவீன கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. இதைப்போல ட்ரோன் என அழைக்கப்படும் பறக்கும் விமானக் கருவி மூலம் மருந்து தெளிப்பதும் காட்சிப் படுத்துப்பட்டு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT