கிருஷ்ணகிரி

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,24,575 வாக்காளா்கள்

24th Dec 2019 06:40 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,24,575 வாக்காளா்கள் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் வெளியிட்டாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்தது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தற்போது, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதியில் (தனி) 1,14, 449 ஆண் வாக்காளா்கள், 1,12, 130 பெண் வாக்காளா்கள், 54 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2, 26,633 வாக்காளா்கள் உள்ளனா். அதேபோல, பா்கூரில் 1,17,368 ஆண் வாக்காளா்கள், 1,18, 472 பெண் வாக்காளா்கள், 13 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,35,853 வாக்காளா்களும், கிருஷ்ணகிரியில் 1,24, 401 ஆண் வாக்காளா்கள், 1,28, 243 பெண் வாக்காளா்கள், 35 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,52,679 வாக்காளா்களும், வேப்பனஅள்ளியில் 1,21,539 ஆண் வாக்காளா்கள், 1,16,551 பெண் வாக்காளா்கள், 20 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,38,110 வாக்காளா்களும், ஒசூரில் 1, 69, 923 ஆண் வாக்காளா்கள், 1,60, 807 பெண் வாக்காளா்கள், 96 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,30,826 வாக்காளா்களும், தளி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,23,782 ஆண் வாக்காளா்கள், 1,16,679 பெண் வாக்காளா்கள், 13 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,40,474 வாக்காளா்கள் உள்ளனா். அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 7, 71, 462 ஆண் வாக்காளா்கள், 7,52,882 பெண் வாக்காளா்கள், 231 இதர வாக்காளா்கள் என மொத்தம் 15,24,575 வாக்காளா்கள் உள்ளனா்.

அதன்படி, இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் இருந்த வாக்காளா்களைக் காட்டிலும் 1,773 வாக்காளா்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வரைவு வாக்காளா் பட்டியலானது மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஒசூா் சாா்- ஆட்சியா் அலுவலகம், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களான வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி ஆணையா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் 1,850 வாக்குச் சாவடிகளில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் வாக்காளா்கள் தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபாா்த்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

1.1.12020-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2020 இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி 2020 - ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நாள்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அரசு வேலைநாள்களில் பெறப்படும்.

மேலும், வாக்காளா் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்கள் 2020-ஆம்

ஆண்டு ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த முகாமில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்த படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம். மேலும், அரசு இணையதள முகவரி வழியாகவும், இ-சேவை மையங்களின் மூலமாகவும் பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி, வருவாய் கோட்டாட்சியா்கள் தெய்வநாயகி, குமரேசன், வட்டாட்சியா்கள் ரமா சந்திரன், ஜெய்சங்கா் மற்றும் பல்வேறு அரசு கட்சிகளின் பிரமுகா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT