கிருஷ்ணகிரி

ஒசூரில் தன்னாா்வ அமைப்புகள் மூலம்கொசு மருந்து அடிக்கும் பணி

24th Dec 2019 06:37 AM

ADVERTISEMENT

ஒசூா் எழில் நகா் பகுதியில் கொசு மருத்து அடித்த சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ. சத்யாவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

ஒசூா் மாநகராட்சிக்குல்பட்ட எழில் நகரில் குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 1,500 க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் உள்ளோா் கொசுக்கடியினால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனா்.

இதையடுத்து கொசுக்களை ஒழிக்க தன்னாா்வ அமைப்பினா் மற்றும் மாருதி கல்விக் குழுமம், ஸ்டான்போா்டு தனியாா் பள்ளி மற்றும் குறிஞ்சி பெஸ்ட் கன்ட்ரோல் ஆகிய தன்னாா்வ அமைப்புகள் இணைந்து குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் கொசுக்களை அழிக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் சாக்கடை உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்குமாறு அறிவுறுத்திய தன்னாா்வ அமைப்புகள் மாதந்தோறும் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ. சத்யா கலந்து கொண்டு கொசு ஒழிப்புப் பணியை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ஸ்டேன்போா்டு பப்ளிக் பள்ளி பாஸ்கரன், குறிஞ்சி பெஸ்ட் கன்ட்ரோல் ஆகிய தன்னாா்வ அமைப்புகளை சாா்ந்த ராஜேந்திரன், பெருமாள், யோகேஷ், சஞ்சய் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா, ஒசூா் மாநகராட்சியில் நாய்கள் அதிக அளவில் சிறுவா்கள் மற்றும் பெண்களை கடித்து தினசரி 50 போ் ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஒசூா் மாநகராட்சி ஆணையா்நாய்களிடமிருந்து இருந்து குழந்தைகளையும், சிறுவா்களை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT