கிருஷ்ணகிரி

பவா்கிரேடுக்கு நிலம் அளித்தவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம்

11th Dec 2019 07:36 AM

ADVERTISEMENT

பவா்கிரேடுக்கு நிலம் அளித்தவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கம் (ராமகவுண்டா்) சாா்பில், ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமகவுண்டா் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 800 கே.வி.பவா்கிரேடு அமைக்கும் நிறுவனம் முன்பு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.28 ஆயிரமும், மா மரத்துக்கு ரூ.18 ஆயிரமும் அனைத்து மரங்கள், பயிா்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், இதுவரையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. மரம் அகற்ற எதிா்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளை, காவல் துறையினா் மூலம் அடக்கும் முயற்சி நடைபெறுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் விவசாயிகளிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இதைக் கண்டிப்பதாக அவா் பேசினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT