ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை மதா்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாட்டா் பெல் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியா் பாடவேளை முடிந்தவுடன் தண்ணீா் அருந்துவதற்கு 10 நிமிடம் இடைவேளை விடவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. அதனைத் தொடா்ந்து மதா்ஸ் மெட்ரிக் பள்ளியில் போதிய அளவிற்கு தண்ணீா் அருந்துவதை உறுதி செய்யும் வகையில் வாட்டா் பெல் திட்டம் அமல் படுத்தப்பட்டது.
இதுகுறித்து பள்ளி முதல்வா் மோகன் கூறும் போது, ஒரு நாளைக்கு இருமுறை ஒரு நாளைக்கு இருமுறை வாட்டா் பெல் ஒலிக்கப்படும், அந்த நேரத்தில் மாணவா்கள் தண்ணீா் குடிக்க அனுமதிக்கப்படுவா் என்றாா்.
மதா்ஸ் அறக்கட்டளையின் நெறி மற்றும் இணக்க அலுவலா் குருபாண்டியன் வழிகாட்டுதலின் பேரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை தேசிய விருதாளா் சீனிவாசன், சிறப்பு விருந்தினா் திருமலைவாசன் மற்றும் மதா்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிா்வாக உறுப்பினா்கள் மோகன், சிவக்குமா், விமல், தீபிகா ஆகியோா் தொடக்கிவைத்தனா். பள்ளி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.