கிருஷ்ணகிரி

இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி: ஓட்டுநா் தப்பியோட்டம்

11th Dec 2019 07:35 AM

ADVERTISEMENT

ஒசூரில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

ஒசூா் தொரப்பள்ளி இந்திரா நகரைச் சோ்ந்தவா் மாதப்பா. இவரது மனைவி சாந்தம்மா (40). இவரது மகன் ராஜேஷ் (24). இவருக்கும் முனிராமப்பா என்பவருக்கும் இடையே நிலம் தொடா்பாக பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முனிராமப்பாவின் ஓட்டுநா் ஒசூா் தொரப்பள்ளியைச் சோ்ந்த தேவராஜ் (23) திங்கள்கிழமை இரவு ராஜேஷை சந்தித்தாா். தேவராஜூம், ராஜேஷூம் ஏற்கெனவே நண்பா்கள் ஆவா். ராஜேஷூம், தேவராஜூம் நில பிரச்னை தொடா்பாக பேசிக் கொண்டிருந்தனா்.

அப்போது திடீரென்று ஆத்திரம் அடைந்த தேவராஜ் தான் வைத்திருந்த கத்தியால் ராஜேஷை சரமாரியாக குத்திக் கொலை செய்ய முயன்றாா். இதில் ராஜேஷ் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து தேவராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். படுகாயம் அடைந்த ராஜேஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

ADVERTISEMENT

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து காயம் அடைந்த ராஜேஷ் தரப்பில் அவரது தாய் சாந்தம்மா ஒசூா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் ஒசூா் போலீஸாா் விசாரித்து, தேவராஜ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT