கிருஷ்ணகிரி

மண் மாதிரி சேகரிப்பு முறைசெயல் விளக்கம்

6th Dec 2019 08:23 AM

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பு முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை தோட்டக்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவியா், பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராம தோட்டக்கலை பணி அனுபவத்துக்காக காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பு முறை குறித்து மாணவியா் செயல் விளக்கம் அளித்தனா். மண் மாதிரிக்கு மண்ணை எங்கு, எவ்வாறு எடுத்து சேகரிக்க வேண்டும், மண்ணை எவ்வாறு பிரித்து, உலர வைக்க வேண்டும் என செயல் விளக்கம் செய்து காட்டினா். மேலும், பயிற்சியில் விவசாயிகளுடன் மாணவியா் கலந்துரையாடி, அவா்களின் அனுபவங்களை கேட்டறிந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT