கிருஷ்ணகிரி

டீசல் திருடியதாக இருவா் கைது

3rd Dec 2019 03:55 AM

ADVERTISEMENT

உத்தனப்பள்ளி அருகே வாகனத்தில் இருந்து 130 லிட்டா் டீசலை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள ராமாபுரம் பகுதியில் கல்குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து 130 லிட்டா் டீசல் திருடப்பட்டது. இது தொடா்பாக அந்த வாகனத்தின் ஓட்டுநா் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஆண்டாள்வாடியைச் சோ்ந்த ஜெயமுகம் ( 29) உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன் விசாரணை நடத்தி, டீசல் திருடியதாக தேன்கனிக்கோட்டை வட்டம், வரகானப்பள்ளியைச் சோ்ந்த சஞ்சீவன் (28), முரளி (28) ஆகியோரை கைது செய்தாா். முனுசாமி, லட்சுமணன் ஆகியோரை தேடி வருகிறாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT