கிருஷ்ணகிரி

தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு  

30th Aug 2019 09:37 AM

ADVERTISEMENT

போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்குள்பட்ட புளியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (32). இவர், போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது மத்தூர், போச்சம்பள்ளி, கல்லாவி உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
 இந்த நிலையில், மத்தூரைச் சேர்ந்த புஷ்பா என்பவர் வீட்டில் சுமார் 20 பவுன் தங்க நகைகளை திருடியதாக மத்தூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 இவர், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வருவதையடுத்து, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், ஐயப்பனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT