கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி எம்.பி. குறைகேட்பு

30th Aug 2019 09:28 AM

ADVERTISEMENT

போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களை சந்தித்த கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லகுமார் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ.செல்லகுமார், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, அகரம், அரசம்பட்டி, புளியம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வியாழக்கிழமை சென்றார். அப்போது, அங்குள்ள கிராம மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
 அதில், வறண்ட ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். தெண்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
 குறைகளைக் கேட்டறிந்த அவர், அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். தொடர்ந்து, வறண்ட ஏரிகளையும், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டிய பகுதியையும் பார்வையிட்டார். மேலும், பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலர் மனோகரன், மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT