அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார். பொருளாளர் முனிராவ், நகரச் செலாளர் சரவணன், மண்டலச் செயலாளர் நந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேதாரண்யத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அம்பேத்கரின் முழு உருவச் சிலையை உடைத்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாநிலத்தில் உள்ள தலைவர்களுக்கு, வெண்கலச் சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.