கிருஷ்ணகிரி

பழங்குடியின மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

27th Aug 2019 10:45 AM

ADVERTISEMENT

பழங்குடியின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து தமிழ்நாடு  பழங்குடியின மக்கள் சங்கத்தினர் பென்னாகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பென்னாகரம்  பேருந்து நிலையம்  அருகே பழங்குடியின மக்களுக்கு எதிராக  நிகழும் அடக்குமுறைகளை கண்டித்து  தமிழ்நாடு பழங்குடியின மக்கள்  சங்கம் சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டக் குழு உறுப்பினர் மாதையன் முன்னிலை வகித்தார்.  
வனத்தில்  இருந்தும், வனப் பகுதிகளிலிருந்தும் பழங்குடியின மக்களை வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நிலமற்ற பழங்குடியினருக்கு நிலம், பட்டா வழங்கி வீடு கட்டித் தரவேண்டும். மத்திய பிரதேசத்தில்  துப்பாக்கி சூடு நடத்திய வனத்துறையினரைக் கைது செய்ய வேண்டும்.  கர்நாடகப் பகுதியில் கிழங்கு எடுத்ததற்காக பழங்குடியினரை கர்நாடக வனத் துறையினரின் கைது  நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்; கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT