கிருஷ்ணகிரி

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க 72 குழுக்கள் அமைப்பு

23rd Aug 2019 08:48 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் அடங்கிய 72 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்தார்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், ஒரப்பம் ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது. சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ, கூட்டத்துக்கு முன்னிலை வகித்தார். கால்நடைத் துறை இணை இயக்குநர் மனோகரன், முன்னாள் எம்பி சி.பெருமாள், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபால், வட்டாட்சியர் கோபி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பயாஸ் அகமது, ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களைக் கொண்ட 72 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மாத காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
 இந்தக் கூட்டத்தில், பசுமை வீடுகள், ஆழ்துளைக் கிணறுகள், முதியோர் உதவித் தொகை, வீட்டு மனை பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT