கிருஷ்ணகிரி

நூலகர் தின விழா

23rd Aug 2019 08:54 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் நூலகர் தின விழா, வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 கிருஷ்ணகிரி மைய நூலகத்தில், இந்திய நூலகத் தந்தை அரங்கநாதனின் 127-ஆவது பிறந்த நாள், நூலகர் தின விழாவாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கண்காணிப்பாளர் அருள்செல்வம், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் மாதேஸ்வரன், வாசகர் வட்ட நிர்வாகிகள் மோகன், கமலேசன், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்த விழாவில், நூலகர்களுக்கு கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கவிதைப் போட்டி, தனித்திறன் போட்டி, பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT