கிருஷ்ணகிரி

சரக அளவிலான கால்பந்து போட்டி

23rd Aug 2019 08:53 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி சரக அளவிலான கால்பந்து போட்டி, கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட கல்வித் துறையின் சார்பில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கிருஷ்ணகிரி சரகத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் கேசவன், தொடங்கி வைத்தார்.
 இந்தப் போட்டியில் கிருஷ்ணகிரி சரகத்துக்கு உள்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 14, 17, 19 வயதுகளுக்கு உள்பட்ட அணிகள் பங்கேற்றன. மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணி, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.
 உடல் கல்வி ஆசிரியர்கள் சைமன், ஸ்டாலின், சுப்பு, கோபி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடல் கல்வி இயக்குநர் திவ்யலட்சுமி, தலைமையாசிரியர் மகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் வெங்கடாஜலம் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT