கிருஷ்ணகிரி

குழந்தையுடன் பெண் மாயம்

23rd Aug 2019 08:57 AM

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் வட்டம் அத்திப்பள்ளி அருகே உள்ள மாயசந்திரத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். இவரது மரிவி பாக்யா (25). இவர்களுக்கு நிகாரியா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாக்யா கடந்த ஓராண்டாக பாகலூர் கோட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.
 இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே செல்வதாக குழந்தையுடன் சென்ற பாக்யா வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பெண்ணின் தாய் எல்லம்மா பாகலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 அதில் தங்களுக்கு கர்நாடக மாநிலம் ஜிகினி அருகே உள்ள கொத்தகோட்டை பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (35) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளனர். அதன் பேரில், பாகலூர் உதவி காவல் ஆய்வாளர் கனிமொழி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT