கிருஷ்ணகிரி

காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

23rd Aug 2019 08:56 AM

ADVERTISEMENT

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
 கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேசுதுரைராஜ், நாராயணமூர்த்தி, எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் நகரத் தலைவர் ரகமத்துல்லா, மகளிர் அணி நிர்வாகிகள் விஜயா, லலிதா, மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது மத்திய அரசு பொய் வழக்குப் பதிந்து, கைது செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT