கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா

16th Aug 2019 08:57 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் 73-ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை வகித்தார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி. ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாஸ்கரன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கிளை மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 சுதந்திரத்துக்காக தியாகிகள் நடத்திய போராட்டங்கள், அவர்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டி, மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் முதல்வர் தமிழரசன், துணை முதல்வர் விஜயகுமார் விழாவை ஒருங்கிணைத்தனர்.
 மாதிநாயனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் டி. ராணி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எல்.சீனிவாசன், ஆசிரியர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 பெரியபனமுட்லு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் இராணுவ வீரர் ராமச்சந்திர கவுண்டர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். 6-ஆம் வகுப்பு, மாணவர்களால் கட்டபொம்மன் நாடகம் நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ப. சுரேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 கிருஷ்ணகிரியில் சோஷியல் டெமாகரிடிக் பார்ட்டி ஆப் இந்தியா, சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பக்ரூத்தின் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அஸ்கர் அலி தேசிய கொடியை ஏற்றினார். நகர துணைத் தலைவர் தஸ்தகீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில், தேசிய கொடி ஏற்றப்பட்டது.
 கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தாளாளர் சி.பெருமாள் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள், முதல்வர் அமலோற்பவம், கலைக் கல்லூரியின் முதல்வர் ஆறுமுகம், நிர்வாக அலுவலர் சுரேஷ், தமிழ்த் துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றேனர். இந்தியாவை வல்லரசாக மாற்ற மாணவர்கள் பாடுபட வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.
 கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆணையர் எச்.ரமேஷ், தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 நாகஜனஅள்ளி பேரூராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு செயல் அலுவலர் கோ.நாகராஜன் தேசிய கொடியை ஏற்றி மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
 சுதந்திர தின விழாவையையொட்டி, பேரூராட்சி பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
 பர்கூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுதந்திர தினவிழாவையொட்டி 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பேரூராட்சியின் செயலாளர் சேம்கிங்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமை எழுத்தர் வெங்கடாசலம், பணி மேற்பார்வையாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு தமிழ்த் துறைத் தலைவர் சௌ.கீதா தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றினார்.
 கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT