கிருஷ்ணகிரி

கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு குழு அமைப்பு

11th Aug 2019 03:31 AM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆள் கடத்தல், கொத்தடிமை தொழில் முறை ஒழிப்புக்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் கடத்தல், கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு தொடர்பாக பயிலரங்கம் நடத்தப்படுகிறது.
ஆள் கடத்தல், கொத்தடிமை தொழில் முûறையை ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் தனிக்குழு அமைக்கவும், அந்த குழுவில் வழக்குரைஞர்கள், காவல் துறை அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் என பல்வேறு துறையினர் இணைந்து செயல்படும் வகையில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆள் கடத்தல், கொத்தடிû தொழில் முறை ஒழிப்பு குழு அறிமுக நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி மீனா சதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுச் செயலாளர் கணேசன், லோக் அதாலத் தலைவர் அறிவொளி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பைச் சேர்ந்த சாலமன் ஆண்டனி, ராஜா மற்றும் வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT