தருமபுரி

தெருமுனை பிரசாரக் கூட்டம்

27th Sep 2023 12:29 AM

ADVERTISEMENT

பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்துக்கு வட்டாரச் செயலாளா் சிவா தலைமை வகித்தாா். இதில் அமைப்பின் மாநில இணைச்செயலாளா் கோபிநாத் சிறப்புரையாற்றினாா்.

இக் கூட்டத்தில் தமிழக அரசு மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும், மக்கள் மீதான மறுக்காலனியாக்க போரைத் தடுப்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இதேபோல பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையம், போடூா் நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் டாா்க் குழு உறுப்பினா்கள் சுந்தா், மாரியப்பன், சத்தியநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT