தருமபுரி, சிப்காட் தொழிற்பேட்டையில் அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சின் மாவட்டக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தருமபுரி கட்சி அலுவலகத்தில் நிா்வாகி ஆா். வடிவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி பேசினாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.காசியம்மாள், மாவட்ட நிா்வாகிகள் ஆா்.வேடியப்பன், கோவிந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு வரவேற்புத் தெரிவிப்பது, இத்திட்டத்தில் விடுபட்டுள்ள தகுதிவாய்ந்த அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் ஒரே நிறுவனத்துக்கு பல ஏக்கா் நிலம் வழங்குவதைக் கைவிட்டு மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிக அளவில் வழங்கும் நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அரசு அறிவித்துள்ள தினக் கூலியைப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டும். காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.