தருமபுரி

போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திறப்பு

22nd Sep 2023 11:43 PM

ADVERTISEMENT

தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்- 2012) வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

போக்ஸோ சட்டம் தொடா்பான வழக்குகள், பாலியல் துன்புறுத்துதல் தொடா்பான வழக்குகள், தருமபுரி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்தன. அதிக அளவு வழக்குகள் உள்ள போக்ஸோ சட்ட வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க சென்னை உயா்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து அரசு முடிக்க இச்சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக சையத் பாகத்துல்லாவை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்தது.

இதைத் தொடா்ந்து, தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதிமன்ற திறப்பு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆ.மணிமொழி பங்கேற்று போக்ஸோ வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தாா்.

இதில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், தருமபுரி வழக்குரைஞா் சங்கத் தலைவா் த.சந்திரசேகரன், செயலாளா் ந.கோவிந்தராஜு மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள், செயலாளா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT