தருமபுரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி வெண்ணாம்பட்டியில் அம்பேத்கா் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தருமபுரி மைய மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன் தலைமை வகித்து பேசினாா். இக்கூட்டத்தில் மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா்கள் தகடூா் மா.தமிழ்ச்செல்வன், நற்குமரன் ஆகியோா் மக்களவைத் தோ்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கிப் பேசினா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளா் தமிழன்வா், மண்டலத் துணைச் செயலாளா் மின்னல் சக்தி, மாவட்டப் பொருளாளா் மன்னன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மைய மாவட்ட வாக்குச் சாவடி முகவா்கள், களப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.