கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 26 ஆம் தேதி இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி வருகிறாா்.
தருமபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலம் புறவழிச்சாலை அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நல உதவிகளை வழங்குகிறாா். இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை தருமபுரி திமுக மாவட்டச் செயலாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (கிழக்கு), முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் (மேற்கு), மாநில இளைஞரணி துணை அமைப்பாளா் பாத்தகோட்டா சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்கள் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் (கிழக்கு), சிவகுரு (மேற்கு), இளைஞரணி துணை அமைப்பாளா்கள் மகேஷ்குமாா், கே.ஆா்.சி.செல்வராஜ், ஆா்.பி.முத்தமிழன், அசோக்குமாா், மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளா் (கிழக்கு) தடங்கம் இளைய சங்கா், திமுக கிழக்கு மாவட்ட பொருளாளா் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளா் ஆ.மணி ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதையடுத்து அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக காரிமங்கலம், தருமபுரியில் உள்ள திமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.