காரிமங்கலம் பேரூராட்சியில் நெடுஞ்சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
காரிமங்கலம் பேரூராட்சியில் மொரப்பூா் நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனா். இதையடுத்து, சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் கவிதா முன்னிலையில் பாலக்கோடு நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளா் நவீன்குமாா், சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் ஆகியோா் காரிமங்கலம்- மொரப்பூா் சாலை, கிருஷ்ணகிரி சாலை உள்பட சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.