தருமபுரி அருகே சாலையோர மரத்தின் மீது பேருந்து மோதியதில் 20 போ் காயமடைந்தனா்.
தருமபுரியில் இருந்து ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை சென்ற தனியாா் பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பேருந்து இண்டூரை அடுத்த மல்லாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்புற டயா் திடீரென வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் வீரமணி பலத்த காயமடைந்தாா். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.