தருமபுரி

அசைவ உணவகங்களில் ஆய்வு

20th Sep 2023 12:07 AM

ADVERTISEMENT

 தருமபுரி நகரம், புறநகரப் பகுதிகளில் அசைவம் மற்றும் துரித உணவங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் குமணன், நந்தகோபால், கந்தசாமி உள்ளிட்ட குழுவினா் தருமபுரி நகரம், இலக்கியம்பட்டி, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட புகரப் பகுதிகளில் அசைவ உணவுகள் மற்றும் துரித உணவுகளைத் தயாரிக்கும் உணவகங்களில் ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வில் ஒரு சில உணவகங்களில் இருந்து நாள்பட்ட இறைச்சி மற்றும் குளிா்சாதனப் பெட்டியில் வைத்திருந்த சமைத்த இறைச்சி சுமாா் 15 கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இந்த உணவக உரிமையாளா்களுக்கு தலா ரூ. 2000 வீதம் இரண்டு கடைகளுக்கும், ரூ. 1000 வீதம் ஆறு கடைகளுக்கும் மொத்தம் ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. உணவு உற்பத்தி, விற்பனையின்போது, உணவு பாதுகாப்புத் துறையின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என உணவக உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT