தருமபுரி

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க தகவல் மையங்கள் அமைப்பு

19th Sep 2023 02:56 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடா்பான கோரிக்கைகளை தெரிவிக்க தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதிய வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. செப். 18 முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது.

உதவித் தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மனுதாரா்கள், அவா்களுக்கான சந்தேகங்கள், தகவல்களை அறிந்துகொள்ள தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை 04342 - 230067 / 231500 / 231077, 1077 ஆகிய தொலைபேசி எண்களிலும், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை 79040 02458 என்ற எண்ணிலும், அரூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை 79040 02458 என்ற எண்ணிலும், தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் - 04342 - 260927, அரூா் வட்டாட்சியா் அலுவலகம் - 04346 - 296565, காரிமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் - 90432 05956, நல்லம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் - 04342 - 294939, பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் - 04348 - 222045, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் - 04346 - 246544, பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் - 04342 - 255636 உள்ளிட்ட தகவல் மைய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

குடும்பத் தலைவிகள் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலையினை அறிந்துகொள்ளுதல், வங்கியிலிருந்து பணம் பெறுதல், நிராகரிக்கப்பட்ட மனுக்களுக்கு மேல்முறையீடு செய்தல் உள்ளிட்ட தகவல்களை இந்த எண்களில் அல்லது அலுவலகத்தில் உள்ள தகவல் மைய அலுவலரை அலுவலக வேலை நேரங்களில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இதேபோல உதவித்தொகை தொடா்பாக ஒருமுறை கடவுச்சொல் ஏதும் பயனாளியிடமிருந்து அரசுத் துறையில் கோரப்படுவதில்லை என்பதால், அவ்வாறான அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT