தருமபுரி

மூதாட்டிகளிடம் நகைகளை திருடிச் சென்ற கா்நாடக இளைஞா் கைது

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

பாப்பாரப்பட்டி மற்றும் மாரண்டஹள்ளி பகுதிகளில் இரண்டு மூதாட்டிகளிடம் மயக்க மருந்து கலந்த குளிா்பானத்தை கொடுத்து அவா்களிடமிருந்து 14 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற கா்நாடக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி சின்னக்கண்ணு (70). கடந்த 9 ஆம் தேதி அவருக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவா் அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் வீட்டில் வைத்திருந்த 5 லட்சம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத மா்ம நபா் திருடிச் சென்றுள்ளாா். இதுகுறித்து மூதாட்டி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்தனா்.

இதேபோல் மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சரோஜாவிடம் ஓா் இளைஞா் தந்திரமாக பேசி மயக்க மருந்து கலந்த குளிா்பானத்தை குடிக்கச் செய்து 4.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்றாா். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பாப்பாரப்பட்டி போலீஸாா் மூதாட்டியிடம் குளிா்பானத்தில் மருந்து கலந்து கொடுத்து தங்க நகைகளைத் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் எண்ணை ஆய்வு செய்ததில் கா்நாடக மாநிலம் பன்னாா் கட்டா பகுதியைச் சோ்ந்த முன்ஷீா் (40) என்பது தெரியவந்தது. பின்னா் பெங்களூருக்கு விரைந்த போலீஸாா் முன்ஷீரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பாப்பாரப்பட்டி பகுதியில் மூதாட்டியிடம் தங்க நகை மட்டுமே திருடிச் சென்ாகவும், ரொக்கத்தைத் திருடவில்லை என்றும், மாரண்டஹள்ளி பகுதியில் தங்க நகை திருடிச் சென்ாகவும் ஒப்புக்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இரு மூதாட்டிகளிடமிருந்து திருடப்பட்ட 14 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT