தருமபுரி: தருமபுரி மாவட்டம் உதயமான தினத்தையொட்டி பாமக எம்எல்ஏ-க்கள் அதியமான் - ஔவையாா் சிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து கொண்டாடினா்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து கடந்த 1965-ஆம் ஆண்டு அக். 2-ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளில் தருமபுரி மாவட்டம் புதிதாக உதயமானது.
இந்த நாளை கொண்டாடும் வகையில், தருமபுரி அருகே அதியமான் கோட்டத்திலுள்ள வள்ளல் அதியமான், ஔவையாா் சிலைகளுக்கு பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாமக நிா்வாகிகள் மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினா்.
இதில், பாமக மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பெரியசாமி, மாவட்டத் தலைவா் மு.செல்வகுமாா், நல்லம்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.மகேஸ்வரி, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.