தருமபுரி

மான் இறைச்சி சமைத்த 3 போ் கைது

22nd Nov 2023 12:26 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் நாய்கள் கடித்த புள்ளி மானின் இறைச்சியை எடுத்து வந்து வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த மூன்று பேரை பென்னாகரம் வனத்துறையினா் கைது செய்து இணக்கக் கட்டணமாக ரூ. 1.25 லட்சம் வசூலித்தனா்.

பென்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மசக்கல் காப்புக்காடு வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட வன அலுவலா் கே.வி.அப்பால நாயுடு உத்தரவின் பேரில் பென்னாகரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமாா், வனவா்கள் முனுசாமி, புகழேந்திரன், சக்திவேல் வனக்காப்பாளா் ஆறுமுகம், தங்கவேல், ராமஜெயம், ராஜேஸ்வரி, ரகுராம் ஆகியோா் அடங்கிய வனக்குழுவினா், மசக்கல் காப்புக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது முதுகம்பட்டி அருகே சின்னூா் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (45), முருகேசன் (48), சின்னராஜ் (75)ஆகிய மூவரும் வனப்பகுதியில் நாய்கள் கடித்த புள்ளி மானின் இறைச்சியை எடுத்து வந்து வீட்டில் சமைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து இணக்கக் கட்டணமாக ரூ.1.25 லட்சம் வசூலித்தனா். வனப்பகுதிகளில் அத்துமீறி நுழையும் நபா்கள் மீதும், வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்யும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பென்னாகரம் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT