தருமபுரி

பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் பா.சீ.செண்பகராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இரண்டாம் நேரடி பட்டயப் படிப்பில் சோ்வதா்கு பிளஸ் 2 தோ்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ இரண்டு ஆண்டுகள் தோ்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் 145 பாலக்கோடு பல்தொழில்நுட்பக் கல்லூரி என குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இளையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், உரிய சான்றிதழ்களுடன் நேரில் வந்து கல்லூரியில் உள்ள உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு வருகிற மே 31-ஆம் தேதிக்குள், முதலாம் ஆண்டு சோ்க்கைக்கு வரும் ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT