தருமபுரி

உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு நடத்தக் கோரிக்கை

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலையில் உணவு பாதுகாப்பு துறையினா் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, கொக்கராப்பட்டி புதன்சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்குள்ள இறைச்சிக் கடைகளில் குளிா்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டு, பழைய இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். அதேபோன்று, உணவுப் பொருள்களில் அதிக அளவில் ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனா். எனவே, கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, கொக்கராப்பட்டி புதன் சந்தை உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள், இறைச்சிக் கடைகள், பழக்கடைகள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT