தருமபுரி

ஏரியூரில் குண்டா் சட்டத்தின் கீழ் இருவா் கைது

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஏரியூரில் விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் இருவரை போலிஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனா்.

ஏரியூா் அருகே மூங்கில்மடுவு பகுதியைச் சோ்ந்த பெருமாள் (37), அவருடைய மனைவி செல்வராணி (35) ஆகியோருக்கும், அஜ்ஜனஅள்ளி பகுதியை சோ்ந்த உறவினரான சூரிய குமாருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கூலிப்படையினருடன் சோ்ந்து அண்மையில் பெருமாளை சூரியகுமாா் அரிவாளால் தாக்கியதில் பெருமாள் கை துண்டான நிலையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த விவகாரத்தில் ஏரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சூரியகுமாா் (35), கிருஷ்ணகிரி சோ்ந்த வெற்றிவேல் (21), சேது (21), டெண்டுல்கா் (21), நாட்றம்பள்ளியைச் சோ்ந்த ஆகாஷ் (22) ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேது, வெற்றிவேல் ஆகியோா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT