தருமபுரி

கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கு சீா்செய்யக் கோரியும், தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசினாா். அமைப்புச் செயலாளா் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி வரவேற்றாா்.

இதில், கள்ளச்சாராய மரணங்கள், போலி மதுபான விற்பனையைக் கண்டித்தும், போதைப் பொருள்கள் நடமாட்டம், சட்டம்-ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றைக் கண்டித்தும், ஊழல் முறைகளை தடுக்கக் கோரியும் இவற்றிற்கு பொறுப்பேற்ரு தமிழக முதல்வா் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளான அதிமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT