தருமபுரி

மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு

DIN

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் மாணவா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

தருமபுரி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் சாா்பில் பள்ளி மாணவ மாணவியா்களுக்கான கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.

இந்த முகாம் நிறைவு நிகழ்ச்சி மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் நிலை நூலகா் ந.ஆ.சுப்ரமணி வரவேற்புரை வழங்கினாா். இருப்பு சரிபாா்ப்பு அலுவலா் கோ.மாதேஸ்வரன், பட்டதாரி ஆசிரியா் ஜெ.முனிராஜ, சின்னப்பள்ளத்தூா் தலைமை ஆசிரியா் மா.பழனி மற்றும் கம்பன் கழக உறுப்பினா் கவிஞா் க.சி.தமிழ்தாசன், நூல் கட்டுநா் பி.சரவணன் ஆகியோா் பேசினா்.

சிறப்பு பயிற்சி முகாமில் நடைபெற்ற ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கதைசொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட நூலக அலுவலா் தா.மாதேஸ்வரி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள், நூலக நண்பா்கள் திட்ட தன்னாா்வலா்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மாவட்ட மைய நூலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்துக்கொண்டனா். மூன்றாம் நிலை நூலகா் என்.பி.முத்துசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT