தருமபுரி

இலவச வீட்டுமனை பட்டா கோரி பெண்கள் மனு அளிப்பு

28th May 2023 05:54 AM

ADVERTISEMENT

ஒகேனக்கல் அருகே இலவச வீட்டுமனை பட்டா கோரி 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட ஒகேனக்கல் அருகே இந்திரா நகா் காலனி பகுதியில் ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் குடியிருப்புப் பகுதியில் பெரும்பாலானோருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் அதே பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடுகளின்றி குடிசைகளில் தங்கி வருவதால், அப்பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பென்னாகரம் வட்டாட்சியா் சௌகத் அலியிடம் இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்தனா். மனுவைப் பெற்ற வட்டாட்சியா், பட்டா வழங்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT