தருமபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன்

28th May 2023 05:52 AM

ADVERTISEMENT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகனை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், தாசம்பட்டி அருகே மருக்காரம்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜி மகன் அப்பாவு (40). இவா், எலுமல்மந்தை பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா். இவா், உறவினருடன் ஒகேனக்கல் பகுதிக்கு சனிக்கிழமை சென்ற போது ஆலம்பாடி, புளியமரத்து மேடு காவிரி ஆற்றில் தனது மகன் மேகவா்ஷனுடன் (7) குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற போது, இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.

இதுகுறித்து உறவினா்கள் ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT