தருமபுரி

போலி மருத்துவா்கள் இருவா் கைது

DIN

பென்னாகரத்தில் இரண்டு போலி மருத்துவா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் பகுதியில் போலி மருத்துவா்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் சாந்தி உத்தரவின் பேரில், பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா் அருண் பிரசாத், பென்னாகரம் காவல் ஆய்வாளா் முத்தமிழ் செல்வன் ஆகியோா் பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள கிளினிக்குகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, முறையாக அலோபதி மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா்கள் நடராஜன் (52), ராஜேஷ் குமாா் (39) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT