தருமபுரி

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் கே.பாலகிருஷ்ணன்

8th May 2023 02:02 AM

ADVERTISEMENT

 

அரசியல்வாதி போல செயல்படும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி மிகைநீரை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் போராட்ட ஆயத்த மாநாடு தருமபுரி பெரியாா் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களி

டம் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசின் பல்வேறு இடையூறுகளைக் கடந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்து 3-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் மீதமுள்ள 3 ஆண்டுகளில் மக்களுக்கு ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீா்ப்பதற்கும் ஆக்கபூா்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் சோ்ந்து மதக் கலவரத்தை உண்டாக்க முயற்சி செய்து வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகளில் காவிரி மிகை நீரை நிரப்பும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். திமுக தனது தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட இத்திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் ஆகஸ்ட் மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் ஒகேனக்கலில் இருந்து தருமபுரிக்கு நடைபயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். தொடா்ந்து அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வோம்.

உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவுப் பணிகளில் தனியாரை அனுமதிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். கா்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டு அணைக்கட்டும் விவகாரத்தில் தோ்தலுக்காக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நிறைவேற்ற முடியாத திட்டத்திற்காக போட்டி போட்டுக் கொண்டு அறிக்கை விடுகின்றன.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி எப்படி எல்லாம் செயல்படக் கூடாதோ, எப்படி எல்லாம் சட்டவரம்புகளை மீறக்கூடாதோ அவற்றை எல்லாம் மீறி ஒரு அரசியல்வாதி போல் செயல்படுகிறாா். பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் குடைச்சல் கொடுத்து மாநிலத்தில் கலவரத்தை உருவாக்க பகடைக்காயாக தமிழக ஆளுநரை பயன்படுத்தி வருகிறாா். அவரது எண்ணம் தமிழகத்தில் நிறைவேறாது. தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடா்பாக மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினருடன் கலந்தாலோசித்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக மாவட்டச் செயலாளா் அ.குமாா் தலையில் நடைபெற்ற மாநாட்டில் மாநிலக் குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு, நிா்வாகிகள் பி.இளம்பரிதி, இரா.சிசுபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT