தருமபுரி

காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

3rd May 2023 12:34 AM

ADVERTISEMENT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கியதில் காா்மெண்ட்ஸ் பணியாளா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், ரெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (37), அதே பகுதியில் உள்ள தனியாா் காா்மெண்ட்ஸில் பணியாளராக வேலை செய்து வந்தாா். நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதிக்கு வந்த அவா், கோத்திக்கல் பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கினாா்.

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த ஒகேனக்கல் போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சந்திரசேகா் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல, அண்மையில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பெங்களூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சேவியரின் உடல் மூன்று நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT