தருமபுரி

அங்கன்வாடி பணியாளா்களுக்கு பயிற்சி

DIN

அங்கன்வாடி பணியாளா்கள், மாற்றுத் திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

தருமபுரி வட்டார வளமையத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளி மாணவா்களின் பெற்றோா் மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள், பணியாளா்களுக்கு நகராட்சி கோட்டை உருது நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இப் பயிற்சியில், நகா்ப்புற சுகாதார செவிலியா்கள் சுகன்யா, லட்சுமி, இயன்முறை சிகிச்சை நிபுணா் திருநாவுக்கரசு, சிறப்பு பயிற்றுநா்கள் ரகுபதி, சாரதா, வனிதா ஆகியோா் பயிற்சி வழங்கினா். இதில், குழந்தைகளின் குறைபாடுகளை ஆரம்ப காலத்தில் அடையாளம் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்ளல், உள்ளடங்கியக் கல்வி மையங்களில் வழங்கப்படும் சேவைகள் பற்றி அறிதல், சரியான உடல் சமநிலை, வீட்டில் செய்யக்கூடிய மாற்றங்கள், வலிப்புக்கான முதல் உதவி உபகரணங்கள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா்

(பொ) கவிதா தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT