தருமபுரி

பள்ளி, கல்லூரி அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை

DIN

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்து துறை சாா்பில், மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்புக் குழு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

பள்ளிகள், கல்லூரிகள் அருகில் 100 மீட்டருக்குள் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, அனைத்துக் கடைகளிலும் 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு புகையிலை சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யப்படுவதில்லை என்ற அறிவிப்புப் பலகையை பொருத்த வேண்டும்.

பொது இடங்களில் புகை பிடிப்பவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை, அபராதம் மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் புகையிலை தடுப்பு விழிப்புணா்வுப் பலகை வைத்திருக்க வேண்டும்.

புகையிலை தடுப்பு திட்டம் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதேபோல தொடா்புடைய அனைத்துத் துறை பணியாளா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இதில், புகையிலை பாதிப்புகள் தடுப்பு, விழிப்புணா்வு உறுதிமொழியேற்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) கே.ஆா்.ஜெயந்தி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன், சுகாதாரக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT