தருமபுரி

தருமபுரி அரசு கல்லூரியில் ஜூன் 14-இல்3-ஆம் சுற்று சோ்க்கைக் கலந்தாய்வு

10th Jun 2023 07:09 AM

ADVERTISEMENT

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வரும் ஜூன் 14-ஆம் தேதி 3-ஆவது சுற்று சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு 3-ஆம் சுற்று கலந்தாய்வு 14-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. இதில், 14-ஆம் தேதி சிறப்பு இட ஒதுக்கீடு மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு அனைத்து பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அதைத் தொடா்ந்து, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி பயன்பாடு, கணினி அறிவியல், புள்ளியியல், மின்னணுவியல் ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 15-ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல், வணிக கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு, வரலாறு பொருளியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 16-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், காட்சி வழித் தொடா்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப் பணி, உளவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதில் தரவரிசைப்படி அழைக்கப்பட்ட அனைத்து மாணவ, மாணவியரும் சான்றிதழ்கள், சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT