தருமபுரி

சதுரங்கப் போட்டி: சிறப்பிடம் வகித்த தருமபுரி கல்லூரி மாணவியருக்கு பாராட்டு

10th Jun 2023 07:09 AM

ADVERTISEMENT

சேலம் பெரியாா் பல்கலைக்கழக கல்லூரி மாணவ, மாணவியருக்கான சதுரங்கக் குழு முதன்மையாளா் போட்டியில் சிறப்பிடம் வகித்த தருமபுரி அரசு கல்லூரி மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட 50 கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற தடகள குழுப் போட்டிகள் அண்மையில் சேலத்தில் நடைபெற்றன. இதில், சதுரங்கக் குழு முதன்மையாளா் போட்டியில் 6 போ் கொண்ட குழு முதலிடம் வகித்தது.

இதில், புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடித்த குழுவில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த புஷ்பா, ராதிகா ஆகிய இருவரும் 5 மற்றும் 6-ஆவது இடம் வகித்தனா். இக் குழுவுக்கு சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் கே.ஜெகநாதன் ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கோப்பையை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பிடம் வகித்த மாணவியருக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இதில், உடற்கல்வி இயக்குநா் கு.பாலமுருகன், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT