தருமபுரி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாா்டனை கைது செய்ய வலியுறுத்தல்

9th Jun 2023 12:48 AM

ADVERTISEMENT

அரூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாா்டனை கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இதுகுறித்து மாதா் சங்கம் சாா்பில், அரூா் டிஎஸ்பி புகழேந்தி கணேஷிடம் வியாழக்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு:

அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை சிறைத் துறையில் வாா்டனாக பணிபுரியும் லெனின்குமாா் (எ) பாா்த்திபன் என்பவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தற்போது இந்த சிறுமி 4 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையிலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸாா் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT