தருமபுரி

பாப்பாரப்பட்டி பொன்னியம்மன் கோயில் எருதாட்ட விழா

DIN

பாப்பாரப்பட்டி அருகே பூகான அள்ளி ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு எருதாட்ட நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பூகான அள்ளி பகுதியில் 13 கிராமங்களுக்கு சொந்தமான ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா தொடக்கத்திலிருந்து பொன் ஏறு கட்டுதல், பூமி விளக்கு வைத்தல், கரகம் எடுத்தல், கங்கையம்மன், கௌரம்மாள் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, கட்டுச் சோறு உடைத்தல், கிடா வெட்டுதல் நடைபெற்றன. புதன்கிழமை பொம்மரசம்பட்டி, கீழ் ஆச்சாரஅள்ளி, நக்கல்பட்டி, சென்னியம்பட்டி, கீழ்எண்டபட்டி, மேல்எண்டப்பட்டி, பூதிப்பட்டி, புதூா் ஏரப்பட்டி, கீழ்கொல்லுப்பட்டி, ராமகவுண்டா் கொட்டாய், பனங்கள்ளி உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தடைந்து சிறப்பு பூஜை செய்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான எருதாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 13 கிராமங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டுவரப்பட்டு அவற்றை தனித்தனியாக பிடித்து கோயிலின் முன்பு அணிவகுத்து நிறுத்தப்பட்டு எருதாட்ட நிகழ்வு நடைபெற்றது.

எருதாட்டத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞா்கள், பொதுமக்கள் அடக்க முயற்சித்தனா். காவல் ஆய்வாளா்கள் முத்தமிழ்ச்செல்வன் (பென்னாகரம்), வேலுதேவன் ( பாப்பாரப்பட்டி) தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

SCROLL FOR NEXT